×

ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர்: காலிறுதியில் நிகோலஸ்

சென்னை: ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் விளையாட, அமெரிக்க வீரர் நிகோலஸ் அல்போரன் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்றில் முதல் நிலை வீரர் சூன் சின் செங் (தைவான், 21வயது, 132வது ரேங்க்) உடன் மோதிய நிகோலஸ் (25வயது, 219வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி 29 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில்  பிரான்ஸ் வீரர் ஆர்தர் கேசோ (20 வயது, 229வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கொரிய வீரர் சீயாங் சான் ஹாங்கை (25வயது, 245வது  ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஆஸ்திரேலியாவின் டான் ஸ்வீனி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சக வீரர் ஜேம்ஸ் மெக்கேபேவை வீழ்த்தியும், ஜப்பான் வீரர் யசுடகா உச்சியமா  6-1, 6-7 (10-12), 6-4 என்ற செட்களில் 2 மணி 27 நிமிடங்கள் கடுமையாகப் போராடி செக் குடியரசு வீரர் டாலிபோர் ஸ்வர்சினாவை சாய்த்தும் காலிறுதிக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - ஜீவன் நெடுஞ்செழியன் நம்பர் 1 ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்களில் பிரெடெரிகோ சில்வா (போர்ச்சுகல்) - நிகோலஸ் அல்போரன் (அமெரிக்கா) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியாவின் சுமித் நாகல் - முகுந்த் சசிகுமார், இங்கிலாந்தின் ஜே கிளார்க் - அர்ஜுன் காதே (இந்தியா) ஜோடிகளும் காலிறுதிக்கு முன்னேறன.


Tags : ATP ,Chennai Open Challenger ,Nicholas , ATP Chennai Open Challenger: Nicholas in quarterfinals
× RELATED சில்லி பாயின்ட்…